வாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்க

Mon, 18 Nov 2024-1:45 pm,

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களுக்கு கடுமையான அழுத்தம் நிறைந்த வாழ்க்கை சூழல்தான் நிலவுகிறது. குடும்ப பிரச்னை, பொருளாதார பிரச்னை, பணி சார்ந்த அழுத்தம் என அன்றாட வாழ்க்கையே அழுத்தம் நிறைந்ததாக மாறிவிட்டது.

 

விலைவாசி உயர்வு வேகத்திற்கு வருவாய் உயராதது, திறன் மேம்பாட்டில் சுணக்கம் என தொடங்கி ஆண் - பெண் உறவுச் சிக்கல் என பலருக்கும் பிரச்னைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். 

 

அந்த வகையில், இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து விடுபட இந்த நான்கு வழிமுறைகளை பின்பற்றும்படி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் இதனை தொடர்ந்து பின்பற்றினால் மன அழுத்தம் நீங்கி நிம்மதியாக வாழலாம். 

 

அனுகூலம் தரும் வடமேற்கு திசை: மன அழுத்தம் நிறைந்து அவதிப்படுபவர்களுக்கு அனுகூலம் அளிக்கக்கூடிய திசை வடமேற்கு என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது உங்களை எதிர்மறை சூழலில் இருந்தும், கடந்தகாலத்தின் மோசமான அனுபவங்களில் இருந்தும் காக்கும் என கூறப்படுகிறது. எனவே எந்த நற்செயலை செய்தாலும் அந்த திசையை நோக்கி செய்யுங்கள். வடமேற்கு திசையை நோக்கி தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி கூட செய்யலாம்.

 

வெள்ளை நிறத்தை கைக்கொள்ளுங்கள்: நீங்கள் அணியும் ஆடை வெள்ளை நிறத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரையில், வெள்ளை நிற ஆடையை அணிந்துகொள்ளுங்கள். அமைதி மற்றும் நிலைத்தன்மையின் சின்னமாக வெள்ளை நிறம் குறிக்கப்படுகிறது. எனவே, வெள்ளை நிறம் உங்களுக்கு மன அமைதியை தரும். 

 

சிவனை நோக்கி வழிபடுங்கள்: மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிவனை வேண்டி வழிபாடு செய்தால் நன்மைகள் பிறக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. சிவனை வீட்டின் வடமேற்கு திசையில் வைத்து வழிபடுங்கள். தினமும் பூஜை செய்யுங்கள். ஓம் நமசிவாய என உச்சரித்துக் கொண்டே இருங்கள். பிரச்னைகள் தீரும். 

 

குரு பகவானை நோக்கி வேண்டுங்கள்: வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்துவிட்டதாக தோன்றினால் குரு பகவானை நோக்கி வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள். கல்விக்கு மட்டுமின்றி ஒருவரின் மனநிலைக்கும் குரு பகவான்தான் முக்கியமானவர். அந்த வகையில், குரு பகவானை வழிபட்டால் அறிவும், சிந்தனையும் தெளிவடையும்.

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link