Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!
ஒருவர் அறிவாற்றல் அதிகமாக இருக்கவேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் கண்டிப்பாகப் புதன் வலுவாக இருக்கவேண்டும். ஒரு குழந்தை கல்வியில் சிறந்து விளங்க காரணமானவர் புதன். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவாற்றலினால், நிலைமையை சிறப்பாக கையாண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.
மிதுன ராசிக்காரர்கள் புதனின் ஆதிக்கம் காரணமாக அறிவுத் திறன் தொடர்பான வேலைகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும், மனம் தளராமல் அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றுவார்கள்.
புதனின் ஆசி பெற்ற கன்னி ராசியினருக்கு வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர்கள். தனது அதீத திறன் காரணமாக, இவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு அடையாளம் காணப்படுகிறார்கள்.
கும்ப ராசிகளுக்கு புதனின் ஆதிக்கத்தினால் விடாமுயற்சியும் ஆர்வமும் குறையாமல் இருக்கும். வெற்றியை அடைய கடுமையாக உழௌக்கும் திறன் பெற்றவர்கள். இவர்களுக்கு தோல்வி என்பதே பிடிக்காது.
மகர ராசிக்காரர்கள் பேச்சால் அடுத்தவர் மனதை ஈர்க்கும் புத்திசாலித்தனத்தை பெற்றவர்கள். அவர்களின் உறுதியான குணம் தொழிலில் வேலையில் வெற்றிகளை குவிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.