Astro Traits: எந்த விதமான சவாலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் ‘சில’ ராசிகள்!
கடகம்: இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சிறந்த மனநிலையுடன் இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். இவர்கள் தங்கள் இயல்பு காரணமாக நேர்மறை அதிர்வுகளை கொடுக்கிறார்கள். இவர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவார்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் எல்லோருடனும் சமூகமாக இருக்க விரும்புவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சனையையும் புன்னகையுடன் எதிர்கொள்ளுவார்கள்.அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.
துலாம் : ஜோதிட ரீதியாக, இந்த ராசிக்காரர்கள் மிகவும் சீரான இயல்புடையவர்கள். வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் நிலையாக இருப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் நிலையான இயல்பு காரணமாக, அவர்கள் விரக்தி அல்லது சோகத்தின் பிடியில் எளிதில் சிக்க மாட்டார்கள். தங்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் கடினமான காலங்களில் காரியங்களை எளிதாக செய்வார்கள். அதே சமயம் கடினமான கடந்து செல்லும் நண்பர்களுக்கு உதவி, தன்னை நல்ல நண்பர்களாகவும் நிரூபித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)