Astro Traits: பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் வல்ல ‘5’ ராசிகள்!
மிதுனம் - இந்த ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பணம் செலவழிப்பதில் தயங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக நிறைய பணம் செலவழிப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கும் தாராளமாக செலவு செய்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் பணம் அவர்களிடம் நிலைக்காது.
சிம்மம் - சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆடம்பர செலவுகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த மக்கள் தங்களுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். பல சமயங்களில் இந்தப் பழக்கத்தால் கடனாளிகளாகி விடுகிறார்கள்.
துலாம் - சுக போக வாழ்க்கைக்கு காரணமான சுக்கிரனின் ராசி இது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆடம்பரமான பொழுதுபோக்குகளைக் கொண்டுள்ளனர், தனது ஆசைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் தமக்கு மட்டுமின்றி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பொழுது போக்கிற்காகவும் பணத்தை செலவிடுகின்றனர்.
விருச்சிகம் - இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பணம் செலவழிக்கும் விஷயத்தில் ஒரு முன்னோடியாக இருக்கிறார்கள். பிறரைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வாழ்கிறார்கள். பணத்தை செலவு செய்யும் விஷயத்தில் இவர்கள் சற்றும் பின்வாங்குவதில்லை.
கும்பம்- இந்த ராசிக்காரர்கள் தங்களின் பொய்யான பெருமையை காட்ட நிறைய செலவு செய்கிறார்கள். சமுதாயத்தில் தங்களின் அந்தஸ்தை நிலைநிறுத்த, இவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களால் தங்கள் நிதி நிலையை சிறப்பபாக வைத்துக் கொள்ள முடியாமல் சிறிது திணறுவார்கள். ஆனாலும் யோசிக்காமல் செலவழிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)