Astro Traits: பணத்தின் மேல் தீராத காதல் கொண்ட ‘சில’ ராசிகள்!

Mon, 10 Oct 2022-3:48 pm,

இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கையே இயந்திரமாக மாறிய சூழ்நிலையில், நம்மில் பலர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக மாறி வருகிறோம் என்பது வருந்ததக்க விஷய்ம ஆகும். சில ராசிக்காரர்கள் அன்பை விட பணத்தை அதிகம் முக்கியத்துவம் கொடுபவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்

பணமா பாசமா என்று வரும்போது, ​​ரிஷப ராசிக்காரர்கள் பணத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தனது கனவை வாழ்கிறார், பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் நேசிக்க தயாராக இருப்பார். பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் என்று அவர் நினைக்கிறார்.

விருச்சிக ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் பணத்தை முக்கியமாக நினைத்தாலும், அவர்கள் ஒரு நீடித்த உறவு இருக்க வேண்டும் என விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற பணத்தின் பின்னால் ஓடுவார்கள். பணத்திற்காக யாரையாவது காதலிக்க கூட தயங்க மாட்டார்கள். வாழ்க்கைத்துணையை விட்டுப் பிரிந்து பணத்துக்குப் பின்னால் போகவும் வாய்ப்பு உண்டு.

மகர ராசிக்காரர்கள் காதலில் உறுதியாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்க விரும்புகிறார்கள். மகர ராசிக்காரர்கள் பணம் மற்றும் அன்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெரும்பாலான மனம் பணம் சம்பாதிப்பதில் தான் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link