மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அனுகூலமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கிரக நிலைகள் மன உறுதியை அதிகரிக்கும், இது வாழ்வாதாரத்திற்கு நல்லது. வேலை மாற்றம், புதிய வேலையில் சேர்வது, பதவி உயர்வு போன்றவற்றிற்கான நேரம் இது, உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ராணுவத்தில் சேர நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறும். நல்ல செய்திகள் வந்து சேரும்.
ரிஷபம்: இந்த மாதம் நீங்கள் அமைதியை காப்பது நல்லது. கோபம் உங்கள் பணிகளை கெடுக்கலாம். முடிவெடுப்பதில் அவசரப்படாமல் பெரியவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், புதிய விஷயங்களை தொடங்கினால் அவற்றில் வெற்றி பெறலாம். வியாபார விஷயங்களில் சட்ட விரோத செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், லாபம் ஈட்ட குறுக்குவழிகள் வேலை செய்யாது. வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண வரவு அதிகமாகும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பயணங்கள் மற்றும் பரபரப்பான வேலைகள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கிரகங்களின் சேர்க்கை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அறிகுறிகளை காட்டுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பாக இருக்கும். 15ம் தேதிக்கு பிறகு இன்னும் நல்ல பலன்கள் வர ஆரம்பிக்கும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
கடகம்: உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் முதல் வாரத்தில் உங்கள் மனநிலை சற்று மந்தமாக இருக்கலாம், ஆனால் இதனால் கிடைக்கும் வெற்றி உங்களை ஊக்குவிக்கும். மூதாதையர் தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. பண வரவு அதிகமாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலம், வீடு, வாகனம் ஆகியவை வாங்கும் யோகம் உள்ளது. மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் நோய்களும் விலகிவிடும்.
சிம்மம்: தொழில்நுட்பத்தில் உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த மாதம் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். சிறிய பிரச்சனைகள் தானாக தீர்ந்து போகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை அவ்வப்போது சரி யெதுகொள்ளுங்கள். சுத்தமான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும், இந்த நேரத்தில் கனமான உணவை உட்கொள்வது நோயை வரவழைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
கன்னி: பல கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். மாத தொடக்கத்தில் இருந்து உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்: அனைத்து பணிகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளவும். உழைப்பு அதிகமாகவும், லாபம் குறைவாகவும் இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் மிகவும் கவனமாக உரையாட வேண்டும். எழுத்து மற்றும் கலை ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த மாத தொடக்கத்தில் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு ஜூன் மாதம் லாபகரமனதாக இருக்கும். அலுவலகத்திலும் குடும்பத்திலும் கனிவுடன் பேசுவதும் கோவத்தை தவிர்ப்பதும் நல்லது. இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இப்போது முதலீடு செய்வதை தவிர்க்கவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு: ஜூன் மாதத்தில், வீட்டிலும் வெளி இடங்களிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரலாம். எனினும், துணிவுடன் எதிர்கொண்டால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணலாம். வணிகர்கள் லாபத்தை அதிகரிக்க புதிய உத்திகளை கையாள வேண்டும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சலுகைகள் உங்கள் வணிகத்தின் லாபத்தை அதிகரிக்கும். பிபி நோயாளிகள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மகரம்: நீங்கள் மனதளவில் அமைதியாக இருக்க வேண்டும், இந்த மாதம் நீங்கள் சிறிய விஷயங்களுக்கு கோபப்பட வாய்ப்புள்ளது. கிரக நிலைகளைக் கருத்தில் கொண்டு, அமைதியாக இருப்பது நல்லது. பிடித்தமான வேலையைச் செய்து கொண்டே இருங்கள். 17ஆம் தேதி முதல் மனச் சுமை குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஆதரவாக இருப்பார்கள். வாகனம், வீடு, நிலம் வாங்குவதற்கு ஜூன் மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.
கும்பம்: இந்த மாதம் கடின உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். 15ம் தேதி வரை உத்தியோகபூர்வ பணிச்சுமை அதிகமாக இருக்கும், இந்த நேரத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும், இதற்குப் பிறகு, குறித்த நேரத்தில் வேலையை எப்படி முடிப்பது என்று திட்டமிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.