Astrology and Ant : கிளி ஜோசியம் தெரியும்; அதென்ன எறும்பு ஜோசியம்
வீட்டில் கருப்பு எறும்புகள் இருப்பது, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வருவதைக் குறிக்கிறது. இந்த எறும்புகளுக்கு சர்க்கரை மற்றும் மாவு அளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது
அரிசி நிரப்பப்பட்ட பாத்திரத்திலிருந்து எறும்புகள் வெளியே வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக கருதபடுகிறது. இதன் பொருள் குடும்பத்தின் நிதி நிலைமை விரைவில் வலுவாக ஆகும் என்பதாகும்.
கருப்பு எறும்புகள் ஒரு வட்ட வடிவத்தில் சூழ்ந்து கொண்டு ஏதாவது சாப்பிடுவதைக் கண்டால், அது தொழிலில் நல்ல வளர்ச்சி மற்றும் வருமானத்திற்கான அறிகுறி என கருதப்படுகிறது
சிவப்பு எறும்புகளைப் பார்ப்பது நல்ல சகுனமாக கருதப்படவில்லை. இது சண்டை, பிரச்சனைகள் மற்றும் பண இழப்பு ஏற்படக் கூடும் என்பதைக் குறிக்கிறது. என்றாலும் முட்டைகளில் சிகப்பு எலும்பு இருந்தால் அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும், எறும்புகளுக்கு உணவு கொடுப்பது என்பது எப்போதுமே நல்லதாக கருதப்படுகிறது
வெவ்வேறு திசைகளில் இருந்து எறும்புகளின் வருகையும் வெவ்வேறு நிகழ்வுகளின் அறிகுறியாகும். உதாரணமாக, வடக்கு திசையில் இருந்து எறும்புகள் வருவது பல விஷயங்களில் சுபமானதாக கருதப்படுகிறது. தெற்கு திசையில் இருந்து வருவதால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். கிழக்கில் இருந்து வரும் போது, சில நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் மேற்கிலிருந்து வரும் போது, தொலைதூர பயணத்தின் யோகம் உண்டாகும்.
(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)