அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?
தமிழ் திரையுலகில், வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக திகழ்பவர், அட்லீ.
விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அட்லீ மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கியிருந்த ஜவான் படம் வெளியானது. இப்படத்தில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து தான் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான கதையை ரெடி செய்து கொண்டிருப்பதாகவும் அட்லீ கூறினார்.
அட்லீ, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், தான் அஜித்தை முதன்முதலாக சந்தித்த தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
தனக்கு, அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாகவும் அவருக்காக மாஸ் கதையை ஏற்கனவே உருவாக்கி விட்டதாகவும் அட்லீ கூறியிருக்கிறார்.
ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருந்த ஜவான் படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் கலெக்ட் செய்தது.