ஜவான் படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடிக்கு விற்பனையா? ஆடிப்போன திரையுலகம்!
)
இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள "ஜவான்" திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர், மேலும் ஜூலை மாதம் டீசர் வெளியாக உள்ளது.
)
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்.
)
ஜவான் படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது.
இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில்,''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது'' என குறிப்பிட்டிருக்கிறது.
இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக ஆர்வலர்களிடத்தில் அதிகரித்திருக்கும் நிலையில், இப்படத்தில் ஆடியோ உரிமை குறித்த ஒப்பந்த விலை பேசு பொருளாக மாறி இருக்கிறது.