இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!
அனைத்து உயிர்களுக்கும் ஆத்மகாரகன் என அறியப்படும் சூரியன், ஒருவருக்கு தேக வலிமையையும் மன வலிமையையும் தருபவர் என்றால், அவர், மனித உடலில் இருதயத்தை ஆள்பவர் என்றும், கண்கள், எலும்புகள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர்
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எவ்வளவு வலு பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்து நற்பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் சூரியன் அதிக சுபத்துவம் அடைந்திருந்தால் தான் அரசாங்கத்தில் உயர் பதவிகளும்,கௌரவம் மரியாதை போன்றவை சாத்தியமாகும்
சூரியன் பலவீனமாக இருந்தால், அவர் ஜாதகருக்கு இருதய நோயை உருவாக்குவார். அதுமட்டுமல்லாமல் கண்பார்வை கோளாறு, மாலைக்கண் நோய், தலைவலி, எலும்புகளில் பிரச்சனையை ஏற்படுத்துவார்
ஜாதகத்தில் கோட்சாரத்தில் சூரியன், பாவ கிரக தொடர்பு ஏற்பட்டு காணப்பட்டால், முதுகு வலியை ஏற்படுத்துவார். அதுவே கோட்சாரம் சரியாகும் பொழுது முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
ரத்தக் கொதிப்பு, இருதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்பட காரணம் சூரியன் அசுபராக இருப்பதால் தான்...
ஜாதகத்தில் சூரியன் பலவீனமாகும் பொழுது, அரசாங்க வேலையையும் கொடுத்து அதில் பெரும் அவமானத்தையும் உருவாக்குபவர் சூரியன்
சூரியன் ராகுவுடன் அல்லது பாவ கிரகங்களுடன் இணைந்து சுப கிரக தொடர்பு இல்லாவிட்டால் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது