`Atrange re` பட நாயகியின் சமீபத்திய புகைப்படங்கள்!
சமீபத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் டிம்பிள் ஹயாதி.
தெலுங்கு தடிகையான இவர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'தேவி-2' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இவர் தற்போது விஷாலுடன் இணைந்து 'வீரமே வாகை சூடும்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இளம் வயது நடிகையான இவர் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளிர்நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு, ஆபரணங்கள் அணிந்து இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.