பாலியல் வாழ்க்கையில் அதிசய மாற்றத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் பீட்ரூட் மேஜிக்
பீட்ரூட்டை சாப்பிடும்போது, காய்கறியில் இருக்கும் நைட்ரேட்டுகள் வாய்வழி குழியில் இருக்கும் பாக்டீரியாவால் நைட்ரைட்டாக மாற்றப்படுகிறது. காய்கறியை மென்று விழுங்கும் போது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அதை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது, இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை தொடர்ந்து உட்கொள்வது பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களைத் திறந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலுறவின் போது ஆண்களுக்கு சிறந்த விறைப்புத்தன்மைக்கு உதவுகிறது. அதோடு, படுக்கையில் நீண்ட நேரம் நீடித்து இயங்க உதவுகிறது. உண்மையில், பீட்ரூட் சாற்றில் இருந்து நைட்ரேட் சப்ளிமெண்ட்டானது பாலியல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட நேரம் செயல்படுவதற்கான ஆற்றலைத் தருகிறது
நைட்ரேட் நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க உதவும். பீட்ரூட்டை தினசரி உட்கொள்வது ஒரு நபரின் இரத்த அழுத்தத்தை ஆறு மணி நேரத்தில் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை கெடுக்கும் முக்கிய காரணியாக அறியப்படுகிறது
உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க, உணவில் பீட்ரூட்டை இப்படி சேர்க்கலாம். பீட்ரூட்டைக் கழுவி, தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி சாலட்டில் சேர்க்கவும். ஆனால், பீட்ரூட்டை சாலடாக அதாவது சமைக்காமல் பச்சையாக உண்ணும்போது, செரிமானத்திற்கு உதவும் வகையில் அதை சரியாக மென்று சாப்பிட வேண்டும்
பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி வேகவைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, அதில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழியவும். இதை உண்பதால் இரத்த எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், உங்கள் உடலில் நைட்ரேட் அளவை அதிகரிக்கவும் உதவும். ஆரோக்கியமான இந்த உணவு, பாலியல் வாழ்க்கையை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்.
பீட்ரூட்டில் இயற்கையான இனிப்பு உள்ளது. எனவே இதை ஜூஸாக பருகினால், அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகலாம். இரண்டு அல்லது மூன்று நடுத்தர அளவிலான பீட்ரூட்களை எடுத்து அவற்றை நன்கு கழுவவும். மிக்ஸியில் அடித்து, சாற்றை வடிகட்டி அப்படியே குடிக்கலாம்
பீட்ரூட்டில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பொட்டாசியம் , மாவுச்சத்து , இரும்புச்சத்து, வைட்டமின் 12 என பல சத்துக்கள் நிறைந்து உள்ளன. வைட்டமின் 12 ரத்த அணுக்களின் உற்பத்திற்கு தேவைப்படும் சத்து. இது பீட்ரூட்டில் அபாரமாக இருக்கிறது, எனவே ஜூஸாக குடிப்பது நல்லது
பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்கும். பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் இருப்பதால், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம்