இந்திய ஆண்களுக்கு ஏற்ற 7 ஹேர் ஸ்டைல்!! ட்ரை பண்ணி பாருங்க..
Curly Top with Tapered Sides : சுருள் முடி இருக்கும் ஆண்களுக்கு சரியாக பொருந்திப்போகும் ஹேர்கட் இது. வட்ட முகம் அல்லது சதுர வடிவ முகம் கொண்டவர்களுக்கு இந்த கட் செட் ஆகும். சைடில் இருக்கும் முடியை ட்ரிம் செய்து விட்டு மேலே இருக்கும் சுருள் முடியை சற்று ட்ரிம் செய்தாலே போதும்.
Buzz Cut : இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள் வைத்திருக்கும் ஹேர்ஸ்டைல் இது. கூர்மையான தாடை கொண்டவர்கள், சதுர வடிவ முகம் கொண்டவர்கள் இந்த ஹேர்-கட் செய்து கொள்ளலாம். இந்த ஹேர்ஸ்டைலை பலர் வெயில் காலத்தில் ஃபாலோ செய்வர். முடி குறைவாக வைத்துக்கொள்ள ஆசைப்படுபவர்களும் இதனை வைத்துக்கொள்ளலாம்.
Man Bun: பெண்கள் மட்டும்தான் கொண்டை போட வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. கொஞ்சம் நீளமாக முடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்களும் பாதி முடியை விட்டுவிட்டு, மேலிருக்கும் முடியை எடுத்து கொண்டை போட்டுக்கொள்ளலாம்.
Messy Quiff: இந்த ஹேர்ஸ்டைல், உங்கள் முடி அடர்த்தியாக இருப்பது போல காண்பிக்கும். இது, வட்ட முகம் கொண்டவர்களுக்கு செட் ஆகும் ஒரு சிகை அலங்காரம் ஆகும்.
Classic Side Part : ஒரு பக்கம் அதிகமாக முடி வைத்து, இன்னொரு பக்கம் முடியை ட்ரிம் செய்யும் ஹேர் கட் இது. 2024ல் மிகவும் ட்ரெண்டான ஹேர்ஸ்டைலும் இதுதான்.
Undercut : மேல் மட்டும் அடர்த்தியாக முடியை வைத்து, இரு பக்கங்களிலும் முடியை ட்ரிம் செய்தால் இந்த ஹேர்ஸ்டைல் ரெடி.
Crew Cut : இந்த சிகை அலங்காரத்தை பராமரிக்க ரொம்ப ஒன்னும் மெனக்கெட தேவையில்லை. இது, பல ஆண்டுகளாக இந்திய ஆண்களால் பின்பற்றப்படும் சிகை அலங்காரம் ஆகும்.