Launch of Audi: ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஆடம்பர ஆடி கார்

Thu, 24 Jun 2021-2:40 pm,

ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆடி இ-ட்ரான் காரில் 71.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் 190 கி.மீ.

அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், உயர்தர நவீன அம்சங்களுடன் வருகிறது ஆடி இ-ட்ரான் ஆடம்பர எஸ்யூவி. இரண்டு பெரிய தொடுதிரை அலகுகள், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றால் அருமையான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த மின்சார கார்.

ஆடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோரூம்களில் மட்டுமே ஈ-ட்ரான் மாடல்களை அறிமுகம் செய்கிறது. இந்த ஆடம்பர சொகுசுக் காருக்கான முன்பதிவு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தியாவில் இ-ட்ரான் விலையை ஆடி இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த கார் ரூ.1.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கார் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். அந்த வண்ணங்களை வெண்மை, பழுப்பு, கருப்பு என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. Chronos grey, Glacier white, Mythos black என்று சிறப்பாக குறிப்பிடலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link