குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!
செல்வங்களை அள்ளித் தரும் மகாலட்சுமி அன்னையை வரலட்சுமி நோன்பு இருந்து வழிபட்டால் 16 வகை செல்வங்களும் குடும்பத்தில் வந்து சேரும் என்பது ஐதீகம்
சகல செல்வங்களும் பெற்று வாழ்க என பெரியோர் வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம். சகல செல்வங்களையும் பெற்றுத் தரும் விரதம் வரலட்சுமி விரதம் ஆகும்
16 வகை செல்வங்கள் என்றால் என்ன? ஆரோக்கியம், சிறந்த கல்வி, செல்வம், தானியங்கள், அழகு, அறிவு, குழந்தைப்பேறு, வலிமை, துணிவு, இளமை, நீண்ட ஆயுள், பெருமை, தைரியம், நல்ல விதி, இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பு, காரிய சித்தி என்பவையை பதினாறு வகை செல்வங்கள் ஆகும்
இந்த ஆண்டு சூரிய பெயர்ச்சியன்றே வரலட்சுமி விரதம் வருவதும் மிகவும் அற்புதமான சேர்க்கை ஆகும். அதிலும், சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கும்போது வரும் இந்த நாளில் வைக்கும் விரதமானது சுக்கிரனின் அருளையும் பெற்றுத் தரும்
பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கடைபிடிக்கும் புனிதமான நோன்பு இது.
கணவர், குழந்தைகள் என குடும்பமே நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் வரலட்சுமி விரத நாளில் விரதம் இருக்கின்றனர், இது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்
வரலட்சுமி பூஜையில் மட்டும் தான், அம்மனை வீட்டுக்கு அழைத்து வந்து அலங்காரம் செய்து பூஜைகள் செய்வது வழக்கம். 16 வகை செல்வங்களை அளிக்கும் ஷோடச லட்சுமி மனம் மகிழ்ந்து வரம் அளிக்கும் நாள் வரமகாலட்சுமி விரதம் வைக்கும் நாள் ஆகும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது