சனி பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 4 நிமிடத்தில் கும்ப ராசிக்குள் சனிபகவான் அமர்ந்தார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில் காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் குடி பெயர்ந்தார் சனி பகவான். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்து குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
ராசிகளில் என்ன பலன்: இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற சனிபகவான், 2025ஆம் ஆண்டு வரை இதே ராசியில் தான் பயணிப்பார். அதன்பின் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அடுத்த ராசியில் பிரவேசிப்பார். எனவே, தற்போது எந்த ராசிக்காரர்ககளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ரிஷபம்: 2025-ஆம் ஆண்டு வரை சனிபகவான் கும்ப ராசியில் இருப்பது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டுக்குள், உங்கள் நிதி நிலையில் இனிமையான மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் நேரம் மிகவும் மங்களகரமானதாகவும் அற்புதமாகவும் இருக்கும். தொழிலதிபர்கள் 2025 ஆம் ஆண்டு வரை பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்: 2025-ம் ஆண்டு வரை சனி கும்ப ராசியில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் பொழியும். திருமணமானவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை நல்ல திருமண வாழ்க்கை இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவுடன், நீங்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு முயற்சியில் உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழில் மற்றும் நிதி ரீதியாக நன்மை பயக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு 2025ஆம் ஆண்டு வரை நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் பொருள் வசதிகள் பெரிய அளவில் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.