சுக்கிர தசை ஆரம்பம்: சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் உறவுகளில் அதிக எச்சரிக்கை தேவை. சில விஷயங்களில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். உடல்நிலையிலும் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் மனநிலையை திடமாக வைத்திருக்க வேண்டும். குழந்தையின் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு சொத்தை விற்க திட்டமிட்டால், அதை இந்த காலத்தில் விற்கலாம், நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல வளர்ச்சி இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகளும் கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகளில் கவனம் தேவை.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டு வரவு செலவுகளில் சிக்கனமாக இருப்பது நல்லது.
கன்னி: உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். தைராய்டு நோயாளிகளும் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆக வாய்ப்புள்ளது. பெண்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டினரால் ஆதாயமடைவீர்கள், செலவுகளும் அதிகரிக்கும். ஆனால் இவை அனைத்து சுப செலவுகளாக இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் கூட்டு வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பெறலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு இப்போது கிடைக்கும்.
தனுசு: பணியிடத்தில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் முதலாளியுடனான உறவு நன்றாக இருக்கும். தேவையற்ற சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மகரம்: மகர ராசிக்காரர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். உங்கள் விருப்பப்படி வேலைகள் நடக்காததால் பணியிடத்தில் குழப்பம் ஏற்படும். உங்கள் மேலதிகாரியின் ஆதரவையும் நீங்கள் பெற மாட்டீர்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
கும்பம்: இந்த ராசிக்காரர்கள் வேலையில் தேவையற்ற தடைகளை சந்திக்க நேரிடும். பண பிரச்சனைகள் இருக்கும். எனினும், சரியாக திட்டமிட்டு செயல்பட்டால், இந்த பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் ஷாப்பிங் செய்யும் போது ஆபரணங்கள் வாங்கி மனைவியை மகிழ்விப்பார்கள். மாமியார் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். மனைவி பெயரில் செய்யப்படும் முதலீடுகளில் லாபம் காணலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை