குரு வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்... குருபார்வையால் கோடி நன்மை
செல்வம், பெருமை, செழிப்பு, உலக இன்பம் போன்றவற்றின் காரணியான குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவரது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காலை 7.08 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். குருவின் வக்ர நிவர்த்தியும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும்.
குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.
குரு வக்ர நிவர்த்தியின் காரணமாக 2024 புத்தாண்டில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் ஆளுமை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு 2024-ல் வக்ர நிவர்த்தி அடைந்த குரு பதவி உயர்வு அளிப்பார். குருவின் வக்ர நிவர்த்தியால், பணப் பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் பழைய நண்பர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். மிதுன ராசி மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிவர்த்தி மகிழ்ச்சியான நாட்களைக் கொண்டு வரும். இதன் காரணமாக 2024 புத்தாண்டில் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழப்பம் மற்றும் வாய்ப்பின்மை காரணமாக நீங்கள் எந்த முக்கியமான நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் இருந்திருந்தால், குருவின் வக்ர நிவர்த்தியின் பின். அதைச் செய்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.