குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்
மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இருப்பார். 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், இக்காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அந்த ராசிகளை எவை என்பதைக் காண்போம்.
மேஷம்: பல்வேறு நிதி நன்மைகளை பெறலாம். முதலீடு செய்ய சாதகமான நேரம் இதுவாகும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடவும். முக்கியமான செயல்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ரிஷபம்: நிதி ஆதாயம் உண்டாகும். சிக்கி இருந்த பணத்தை மீட்கலாம். சொத்து அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நல்ல நேரம். வருமானம் பெருகும். மரியாதை கூடும். ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம்: அதிக லாபம் பெறலாம். நிதிப் பலன்களை பெறலாம். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும. புதிய வேலையைத் தொடங்க சரியான நேரம். பொருளாதார நிலை மேம்படும். முதலீடு மூலம் நல்ல லாபம் பெறலாம்.
கடகம்: வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் லாபம் கொட்டும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும்.
சிம்மம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும். நிதி ஆதாயம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை கூடும். பொருளாதார நிலை மேம்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் லாபம் பெருகும்.
துலாம்: பணியிடத்தில் வெற்றி பெறலாம். நிதி ஆதாயம் மூலம் நல்ல வாய்ப்புகளை பெறலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம்.
தனுசு: குரு பெயர்ச்சி நன்மை தரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சாதகமான நேரம் இது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.