கணவன்-மனைவிக்குள் இருக்க வேண்டிய வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
திருமணம் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்படும், புனிதமான பந்தமாக பார்க்கப்படுகிறது. இந்த பந்தம், ஏழேழு பிறவிகளுக்கும் தொடரும் என ஆன்றோர்-சான்றோர் கூறுவதுண்டு. காலங்களும் வாழ்க்கை முறையும் மாறினாலும், பலர் திருமண உறவுதான் இருப்பதிலேயே மிகவும் வலுவான உறவு என்று நம்புவதுண்டு.
’ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதெல்லாம் இப்போது பழைய கதையாகிவிட்டது. ஆதி காலத்தில் இருந்து மக்கள் பலர் திருமணம் செய்து கொள்பவர்களில் ஆணை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால், இவர்களின் இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் பல திருமணங்கள் நடைப்பெற்று வருகின்றன.
கிரிக்கெட் வீரர் சச்சினின் மனைவி அஞ்சலி, அவரை விட 7 வயது மூத்தவர். அதே போல, நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை விட 10 வயது மூத்தவராக இருக்கிறார். இப்படி, நிஜ வாழ்க்கையிலேயே பல திருமணங்கள் நடைப்பெற்று வருகின்றன.
அறிவியல் கோட்பாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்கு எந்தளவிற்கு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் Copulation என கூறுகின்றனர்.
அறிவியலின்படி, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது அவர்கள் உடலுறவு கொள்ள தகுதியானவர்களாக மாறுவதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் 7 முதல் 13 வயதில் ஏற்படும். ஆண்களுக்கு 9 முதல் 15 வயதில் ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் வேகமாக நடைபெறுவதால், இவர்கள் உடலுறவை பெறுவதற்கு தகுதியானவர்களாக மாறுவதாக கூறப்படுகிறது.
ஒரு சில நாடுகளில் உடலுறவை கொள்வதற்கான வயது 16 ஆக இருக்கிறது. இந்தியாவில், இதற்கான வயது வரம்பு 18ஆக உள்ளது. அதே போல, பெண்ணிற்கு திருமண வயது 21 என்றும் ஆணிற்கு சராசரியான திருமண வயது 24 என்றும் கூறப்படுகிறது. இதனால், திருமண உறவில் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே 3-5 வயது இடைவேளி இருப்பது சரியாக இருக்கும் என பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வயது வித்தியாசம் அனைவருக்கும் ஏற்புடையது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.