தீபாவளியன்று மாலையில் செய்யும் இந்த வேலைகள் செல்வத்தை தொலைத்துவிடும்! ஜாக்கிரதை

Sun, 12 Nov 2023-5:51 pm,

இந்து மதத்தில், தீபாவளி பண்டிகை மிகுந்த பக்தி பரவசத்துடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், லட்சுமி தேவியையும், விநாயகப் பெருமானையும் இரவில் வழிபடும் மரபு உள்ளது. லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம், பணப்புழக்கம் ஆண்டு முழுவதும் இருக்குக்ம். சுப பலன்கள் கிடைக்கும். 

லட்சுமி தேவியின் அருளால், ஒருவரது வாழ்வில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் நீங்கும், ஆனால், தீபாவளியன்று தவறுதலாக கூட செய்யக் கூடாத சில விஷயங்களை செய்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகலாம்

தீபாவளியன்று மாலை வேளையில் விளக்குமாறு எடுத்து வீடு கூட்டக்கூடாது. அது லட்சுமி கடாட்சத்தை துடைத்துவிடும். துடைப்பக்கட்டை என்று சொல்லும் சீமாறு சுத்தப்படுத்த உதவினாலும், இன்று இரவு அதை பயன்படுத்தினால், செல்வம் வீட்டில் இருந்து துடைத்துச் செல்லப்படும்

தீபாவளியன்று பொழுதுபோக்காக சீட்டாட்டம் விளையாடுவது மிகவும் தவறு. இது செல்வத்தை போக்கும்

தீபாவளி மட்டுமல்ல, என்றுமே பெண்களை மதிப்பது மிகவும் அவசியமானது. பெண்களை மதிக்காதவர்கள் வீட்டிலும், பெண்களின் கண்ணீர் சிந்தும் இடத்திலும் லட்சுமிதேவி வாசம் செய்யமாட்டார்

இந்த மூன்று தவறுகளைத் தவிர்த்து, அன்னையை வணங்கினால் அனைத்து செல்வட்ங்களும் வந்து சேரும்

உணவுக்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க இன்று அன்னை அன்னபூரணியை வழிபடவேண்டும்

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை  உறுதிப்படுத்தவில்லை

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link