மாரடைப்பை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை... எகிற வைக்கும் சில உணவுகள்!
இனிப்பு உணவுகள்: குக்கீகள், கேக்குகள், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற இனிப்புகளில் சேர்க்கப்பட்ட அளவுக்கு அதிகமான சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை எகிற வைக்கும்.
முட்டையின் மஞ்சள் கரு: முட்டை ஊட்டசத்து மிக்க சிறந்த உணவு தான். ஆனால், ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு தான் உண்ண வேண்டும்.
சிவப்பு இறைச்சி: நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள மாட்டு இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியில் . இது உங்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். எனவே இதனை அதிகம் உட்கொள்வதை நிச்சயம் தவிர்க்கவும்
சோடா பானங்க்கள்: செயற்கை பழச்சாறுகள் மற்றும் சோடா பானங்களில் உங்கள் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் சர்க்கரை மற்றும் கலோரிகள் ஏராளமாக உள்ளன. இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ள தொத்திறைச்சி, பன்றி இறைச்சி போன்ற பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: துரித உணவுகளில் சோடியம், கலோரிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஏராளமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்: கொழுப்பு அதிக உள்ள பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம். எனவே, கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.
பொரித்த உணவுகள்: எண்ணெயில் பொரித்த அனைத்து வகையான உணவுகளையும் தவிர்க்கவும். உடல் பயிற்சி செய்யும் வழங்க்கம் இருப்பவர்கள் அளவோடு சாப்பிட்டால், தவறில்லை. ஆனால், உடல் செயல்பாடுகள் இல்லாத ழவாழ்க்கை முறையில் இருப்பவர்கள், இதனை அதிகம் சாப்பிடுவதால் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.