அயோத்தி ராமர் கோயில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயில் கோலாகலமாக திறக்கப்பட இருக்கிறது
கோயில் திறப்புக்கு முன் நடைபெற இருக்கும் முன் யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது
பிரதமர் மோடி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்
சுமார் 40 நிமிடங்கள் அவர் கோயில் வளாகத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது
12.15 மணியில் இருந்து 12.45 மணிக்குள் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
நாடு முழுவதும் இருந்துசுமார் 10 ஆயிரம் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர்
அதுமட்டும் இல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோயில்களிலும் ராமர் கோயில் திறப்பு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு முன்பு ராமருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன
கும்பாபிஷேகத்தால் விழாக்கோலம் பூண்டுள்ள ராமர் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
அயோத்தியா நகரமே மின்னொளி வீசிக் கொண்டிருக்கிறது
நாடெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தியாவில் திரண்டுள்ளனர்
இன்று பொதுமக்கள் அயோத்தியா ராமர் கோயிலில் வழிபாடு நடத்த முடியாது
நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக ராமர் கோயில் திறக்கப்படும்
ஆன்லைன் பக்கத்திலும் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அயோத்தியாவின் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருக்கும் ராமர் கோயிலின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன
கோயில் கட்டட வடிவமைப்பு மிகப்பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது