கட்டெறும்பு உன்னை தொட்டா பட்டாம்பூச்சியா மாறும்..! திவ்ய பாரதியின் வைரல் பிக்ஸ்!
சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை திவ்யபாரதி. கல்லூரி நாட்களில் மாடலிங் துறைக்குள் நுழைந்த இவர், 2015ல் 'Miss Ethnic Face of Madras' பட்டத்தை வென்றார்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்களை திறக்கும்போதும் முதலில் அனைவரின் கண்ணில் தென்படும் புகைப்படம் என்றால் அது இவருடையது தான்.
ரசிகர்கள் பலரும் திவ்யபாரதிக்கு ஆர்மி ஆரம்பித்து அவரது புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். நன்கு தமிழ் பேசும் இவர் கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கவே ரசிகர்கள் பலரும் தவமாய் கிடப்பார்கள், அந்த அளவிற்கு இவர் தற்போது ட்ரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.