சூரியன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரி இல்லை, எச்சரிக்கை தேவை

Tue, 14 Jun 2022-5:48 pm,

மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் மாற்றத்தால் கலவையான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய முதலீடு செய்ய நினைத்தால், கண்டிப்பாக பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் அதை செய்யவும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம். இது பிரச்சனைகளை எற்படுத்தும். 

கடக ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சில வேலைகளில் தோல்வி ஏற்படும். இதன் காரணமாக நீங்கள் வருத்தமும் கவலையும் அடையலாம். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இந்த காலத்தில் கொடுக்கும் கடனால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

தற்போது சூரியன் ரிஷப ராசியிலிருந்து நகர்ந்து மிதுன ராசியில் நுழையவுள்ளார். அதன் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களிடமும் காணப்படும். அவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். குழந்தைகள் மூலம் மன அழுத்தம் ஏற்படலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் கடினமாக ஒருவர் உழைத்தாலும் பலன் கிடைக்காது. அதிகப்படியான பணச் செலவு காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடக்கூடும்.

மீன ராசியில் சூரியனின் ராசி மாற்றத்தால் கலவையான பலன் காணப்படும். நீங்கள் பயணிக்கும் எண்ணத்தில் இருந்தால், அந்த பயணத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்துங்கள். ஜாக்கிரதை உணர்வு மிக அவசியம். தொழிலில் ஈடுபடுபட்டுள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரமும் மாணவர்களுக்கு தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link