அக்டோபர் 17 நாளை வெளியாகும் பஜாஜ் பல்சர் N125 மோட்டர்சைக்கிளின் முக்கிய அம்சங்கள்!

Wed, 16 Oct 2024-2:26 pm,

அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய சந்தையில் பல்சர் N125 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் தகவலை நிறுவனம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,  நாளை அறிமுகம் உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

பல்சர் N125 சோதனை ஓட்டங்களின் போது பார்த்த தகவல்கள், கசிந்த படங்களின் படி,  முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் ஜோடியாக ஸ்ட்ரை செய்யும் அலாய் சக்கரங்களைக் கொண்ட ஒரு ஸ்போர்ட்டி வடிவமைப்பு உள்ளது. இது, செயல்திறன் மற்றும் அழகியலில் கவனம் செலுத்தும் வகையில் உள்ளது  

எஞ்சின்: பல்சர் N125 ஆனது பஜாஜின் 125cc வரிசையில் வரும் வாகனமாக இருக்கும். இது ஒரு சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 

 

அதிகாரபூர்வ சக்தி மற்றும் முறுக்குவிசை புள்ளிவிவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், பைக் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வலுவான செயல்திறனை கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம்

அறிமுகப்படுத்தப்பட்டதும், பஜாஜ் பல்சர் N125, Hero Extreme 125R மற்றும் TVS Raider போன்ற பிரபலமான மாடல்களுடன் 125cc சந்தையில் போட்டிபோடும். 

பஜாஜின் பல்சர் குடும்பத்தில் புதிய சேர்க்கையை அதிகாரப்பூர்வமாக பார்ப்பதற்காக அனைவரும் அக்டோபர் 17ம் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link