நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் `சூப்பர்` உணவுகள்...!
நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகளை காலை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது நிலையில் அவை நீடித்த நிலையான ஆற்றலை வழங்குகின்றன.
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமான நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்கள் நிலையான ஆற்றலை வழங்கி ஒட்டுமொத்த ஸ்டாமினாவை மேம்படுத்துகின்றன.
பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளதால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஸ்டாமினாவை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு குடிப்பது நல்ல பலனைத் தரும்
கிரீன் டீயில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டி ஆற்றலை வழங்குகின்றன. உங்கள் வழக்கமான டீ அல்லது காபிக்கு பதிலாக ஒரு கப் க்ரீன் டீயுடன் நாளை தொடக்கவும்.
ஓட்ஸ்: அதிக நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் உள்ள ஓட்ஸ், உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. மிகவும் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் பருமனும் குறையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.