துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்
நவீன காலத்தில் பாத்ரூம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டதால் எல்லோரும் வெளியில் குளிப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் பொதுவெளியில் ஆறு, குளங்களில் தான் குளிப்பார்கள். அப்படி குளிக்கும்போது ஒருபோதும் நிர்வாணமாக குளிக்கவே மாட்டார்கள்.
உடம்பில் அரைகுறை ஆடையுடன் தான் குளிப்பார்கள். ஏனென்றால் முந்தைய காலங்களில் பாம்பு, பூச்சிகள் கடித்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். குழந்தைகளைக் கூட அரைகுறை ஆடை அணிந்தே குளிப்பாட்டுவார்கள்.
குளியல் குறித்து சாஸ்திரம் ஏதேனும் சொல்லியிருக்கிறதா? என்றால், ஆம் சொல்லியிருக்கிறது. நிர்வாணமாக குளிப்பது மகாலட்சுமிக்கு பிடிக்கவே பிடிக்காது. வருண பகவானுக்கு சுத்தமாக பிடிக்காது. சாஸ்திரத்தின்படி நிர்வாணமாக குளிப்பது ஒரு பாவம்.
இந்த பாவத்தை செய்பவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும், குடும்பத்தில் புது பிரச்சனைகள் எல்லாம் வெடிக்கும். எப்போது குளித்தாலும் முழு ஆடைகளை அணிந்தே குளிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டாவது குளிக்க வேண்டும். குளிக்கும் நீர் அதிக சூடாகவும் இருக்கக்கூடாது, அதிக குளிராகவும் இருக்க கூடாது. தண்ணீரை எப்போதும் கால் பாத த்தில் இருந்து ஊற்றி கடைசியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும்.
குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் வேப்பிலை கலந்து குளித்தால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். சோம்பல் நீங்க சுறுசுறுப்பு உண்டாகும். உடலில் இருக்கும் தீய விஷயங்கள் வெளியேறும். தீய சக்திகள், திருஷ்டி தோஷங்கள் ஒழிந்து போகும்.
ஆண்கள் சனிக்கிழமைகளிளும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பல விதமான வியாதிகளை போக்க வல்லது. மனமும், உடலும், குடும்பமும் தூய்மையுடன் பாதுகாப்பாக இருக்க முன்னோர்கள் சொல்படி கேட்டு நடந்தால், எப்பொழுதும் நமது கெட்டது நடக்காது, நன்மைகள் தான் நடக்கும்.