Beauty Tips: அழகிய நீண்ட கூந்தலை பெற ‘5’ எளிய வழிகள்!
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, முடி உதிர்தல் ஏற்படுகிறது, எனவே உங்கள் உணவில் புரதம் மற்றும் வைட்டமின்களை சேர்த்துக் கொண்டால் அடர்த்தியான முடியை பெறலாம்.
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த்தில், உடல் கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ, முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். டீ பேக்குகளை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவதன் மூலமும் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கூந்தல் வலுவிழக்க பதற்றம் முக்கிய காரணம், எனவே உங்கள் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி இரத்த ஓட்டம் சீராகும்.
வெங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் காணப்படுகின்றன, இது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. வெங்காயச் சாற்றை முடியின் வேர்களில் தடவுவதன் மூலம், உச்சந்தலைக்கு கெரடின் புரதம் கிடைக்கிறது. இது கூந்தலுக்கு அதிக வலிமையைக் கொடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள புரதம், இரும்புச்சத்து மற்றும் நிகோடினிக் அமிலம் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இதனுடன், வெந்தயத்தில் உள்ள இயற்கை எண்ணெய் முடிக்கு பொலிவைத் தருவதோடு, கூந்தல் உடைந்து போகாமல் பாதுகாக்கிறது.