ITR தாக்கல் செய்யும் முன்... TCS - TDS இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்!

Fri, 19 May 2023-3:15 pm,

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான நேரம் நெருங்கி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலானோருக்கு TDS மற்றும் TCS இடையிலான வித்தியாசம் அறியாமல் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பலருக்கு புரிவதில்லை.

வரியை வசூலிக்க இரண்டு வெவ்வேறு முறைகள் உள்ளன. TDS என்பது மூலத்தில் வரி விலக்கைக் குறிக்கிறது, டிசிஎஸ் என்பது மூலத்தில் வரி வசூலைக் குறிக்கிறது. இரண்டிலும், பணப் பரிவர்த்தனையின் போது வரிப் பகுதி கழிக்கப்படுகிறது. இந்த பணம் அரசிடம் டெபாசிட் செய்யப்படுகிறது. 

TDS என்பது 1961 இன் வருமான வரிச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட சேவைகளுக்காகச் செலுத்தப்படும் எந்தவொரு கட்டணத்திலிருந்தும் சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் கழிக்கும் வரியாகும். வருமானத்தில் இருந்து வரி கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும். இது பல்வேறு வகையான வருமான ஆதாரங்களில் கழிக்கப்படுகிறது. இதில் சம்பளம், வட்டி மற்றும் முதலீட்டில் பெறப்படும் கமிஷன் போன்றவை அடங்கும். 

TCS மூலத்தில் வரி வசூலிக்கப்படுகிறது. மூலத்தில் வசூலிக்கப்படும் வரி என்று பொருள். சில வகையான பொருட்களின் பரிவர்த்தனைக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது. மது, சிகரெட் மற்றும் மோட்டார் வாகனங்கள் விற்பனை போன்ற குறிப்பிட்ட குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இது பொருந்தும். வாங்குபவரிடமிருந்து டிசிஎஸ் வசூலித்து அதை அரசாங்கத்திடம் டெபாசிட் செய்யும் பொறுப்பு, பொருட்களை விற்பனை செய்பவரையே சாரும்.

விலையை வசூலிக்கும் போதே மூலத்திலிருந்து வரி வசூலிப்பதால், அது மூலத்தில் சேகரிக்கப்பட்ட வரி என்று அழைக்கப்படுகிறது, அதாவது TCS. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 206C (1) இன் படி, வணிக நோக்கங்களுக்காக சில பொருட்களின் விற்பனையில் மட்டுமே டிசிஎஸ் கழிக்க ஒரு விதி உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link