25 வயதாகிவிட்டதா... வாழ்க்கைக்கு தேவையான இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்
1. சமையல்: உலகில் நீங்கள் எந்த பகுதிக்கு போனாலும் சமைக்க தெரிந்தால் நிச்சயம் பிழைத்துக்கொள்ளலாம். ருசியாக சாப்பிடுவது ஒருபுறம் என்றால் ஆரோக்கியமாக சாப்பிட சுயமாக சமைப்பதும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்கும் குறிப்பிடுவதுதான்.
2. அடிப்படை முதலுதவி: ஒருவர் தனக்கு ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வது மட்டுமின்றி சிறு சிறு வீட்டு வைத்தியங்களை தெரிந்துகொள்வதும் அவசியம். அதேபோல் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அடிப்படையாக முதலுதவி முறையோ அல்லது பின்பற்ற வேண்டிய மருத்துவ அடிப்படைகளையோ தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
3. ஆடை அறிவு: பொது இடங்களுக்கு போகும்போதும், அலுவலகங்களுக்கு போகும்போதும், நண்பர்கள் உடன் வெளியே செல்லும்போதும் இடத்திற்கு ஏற்ப ஆடை அணியும் திறன் இருக்க வேண்டும். அதேபோல், தட்பவெப்ப சூழலை பொறுத்தும் ஆடை அணிய தெரியவேண்டும். இது பெரிய நம்பிக்கையை அளிக்கும்.
4. நிதி குறித்த அறிவு: வருமானத்தை எப்படி சேமிப்பது, சரியான இடத்தில் எப்படி முதலீடு செய்வது நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது உங்களின் வாழ்வில் தெரிந்துவைத்திருக்க வேண்டிய முக்கிய திறன்களில் ஒன்றாகும்.
5. நடத்தை முறை: பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது; உயர் அதிகாரிகள், மூத்தவர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்துகொள்வது உள்ளிட்ட நடத்தை முறைகளை 25 வயது இளைஞர் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.
6. சுத்தமாக இருத்தல்: நீங்கள் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச்செல்லும். அறையில் இருந்து குப்பைகளை அகற்றுவது; ஒட்டடை அடிப்பது; தூசிகளை துடைப்பது; சமையல் பாத்திரங்களை முறையாக கழுவது; கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்வது; வைத்திருக்கும் சைக்கிள், பைக், கார் உள்ளிட்டவையை அடிக்கடி கழுவது ஆகியவை முக்கியமான ஒன்றாகும்.
7. சுற்றுச்சூழல் குறித்த அறிவு: மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது, மரம் - செடி வளர்ப்பது போன்ற சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களை தெரிந்துகொள்வதும் அவசியம். எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் இதுவும் பேரூதவியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கு வாசகர்களுக்கு தகவல் அளிக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாகும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.