Belly Fat குறைக்கணுமா? சீரகத்தை இப்படி சாப்பிட்டா சூப்பரா குறைக்கலாம்
நம் இந்திய சமையறைகளில் வெகுவாக பயன்படும் சீரகம் உடல் எடையை குறைக்க ராமபாணமாக உதவும். சீரகத்தால் தொப்பையை நிரந்தரமாக நீக்கிவிடலாம். எடை இழப்பு தவிர சீரகத்தின் பிற நன்மைகளை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
இரவில் தூங்கும் முன், இரண்டு ஸ்பூன் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக நீரை கொதிக்க வைக்காமல் அப்படியே குடிக்கவும். இதற்குப் பிறகு, மீதமுள்ள சீரகத்தை மென்று சாப்பிடவும். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்
உங்கள் தொப்பையை குறைக்க சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இது பசியைக் குறைத்து, நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர் தேக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைத்து எடையை குறைக்க சீரகம் அருமருந்தாக உதவும்.
உங்களுக்கு வாயு, வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், சீரகம் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். செரிமானத்தை குணப்படுத்த இது மிகவும் நல்ல மருந்து.
சர்க்கரை நோயாளிகளுக்கு சீரகம் ஒரு அருமருந்தாக உதவுகிறது. இது இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை இது அதிகரிக்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை இருப்பவர்கள் கண்டிப்பாக சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
முகப்பரு பிரச்சனை இருப்பவர்களுக்கும் சீரகம் மிகவும் நல்லது. இது ஆண்டிஃபங்கல் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் முகப்பருக்களை அகற்ற உதவுகிறது.