Ben Stokes Retirement: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் அதிகம் சம்பாதித்த ஸ்டோக்ஸ் சொத்து மதிப்பு!

Mon, 18 Jul 2022-11:15 pm,

இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற இருக்கிறார்.

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். அவருக்கு வயது 31. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில், 39-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ்  அதிக சம்பளம் வாங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரராகவும் இருக்கிறார். ECB பென் ஸ்டோக்ஸுக்கு $3.36 மில்லியன், அதாவது ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் ஊதியமாக கொடுக்கிறது. 

11 மில்லியன் டாலர்களுக்கு மேல் அதிபதியாக இருக்கும் அவர், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் மூலமும் அதிகம் சம்பாதிக்கும் வீரராக இருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link