சனிப்பெயர்ச்சி 2023: எந்த ராசிகளுக்கு அனுகூலம்? யாருக்கு ஆபத்து? நிவாரணம் என்ன?
ஜோதிட சாஸ்திரப்படி 2023 ஜனவரி 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி ஆனவுடன் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். இதனால் இவர்களுக்கு இத்தனை நாட்களக முடங்கி இருந்த பல பணிகள் நடந்து முடியும். சனியால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.
ஜனவரி 17, 2023 முதல் துலாம் ராசிக்காரர்களும் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள். இவர்களுக்கு தீராத நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிகப்படியான முன்னேற்றம் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும்.
2023 ஜனவரி 17 ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கும் போதே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் நடந்து வருகிறது. சனி ராசியை விட்டு வெளியேறும் போது அதிகப்படியான நன்மைகளை அள்ளித் தருவார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் இந்த ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இது மிகவும் வேதனை மிகுந்ததாக இருக்கும். உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் இருக்கலாம். பண இழப்பு ஏற்படலாம்.
மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். ஏப்ரல் 17, 2030 வரை, ஏழரை ஆண்டுகள் இந்த ராசியில் இதன் தாக்கம் தொடரும். எனினும், ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டத்தில் அதிக சிரமம் இருக்காது. எப்போதும் சனி பகவானை பிரார்த்திப்பது நல்லது.
ஜோதிடக் கணக்கின்படி, 2023 முதல் மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். இந்த ராசியில் மார்ச் 29, 2025 வரை ஏழரை நாட்டு சனி தொடரும்.
ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தீய விளைவுகளைத் தவிர்க்க, சனி பகவானை மகிழ்விக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா போன்ற தோத்திரங்களை பாராயணம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது, சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலில் விளக்கெற்றி வழிபடுவது போன்றவற்றால் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)