வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
உலர் திராட்சையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன, இதில் பயோபிளேவனாயிட்ஸ்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எவ்வித நோய்களும் அண்டாது.
உலர் திராட்சை அல்லது உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரை தினமும் குடித்துவர இதயம் மற்றும் கல்லீரல் சம்மந்தமான நோய்கள் எதுவும் வராது.
தினமும் வெறும் வயிற்றில் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரை குடித்துவர உங்கள் உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இது ஒரு சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது.
உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும்பொழுது உங்களது செரிமான மண்டலம் சிறப்பாக செயலாற்றும். இதனை குடிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணர முடியும்.