Best Bikes List: நீங்கள் பைக் வாங்க உள்ளீர்களா? குறைந்த விலை கொண்ட பைக்குகளின் பட்டியல்..
![ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் Hero XTreme 160R](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/04/14/188101-bike1.jpg?im=FitAndFill=(500,286))
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அசத்தலான பைக்காகும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர். இது 163CC, 1-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 2-வால்வ் எஞ்சின் கொண்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 45-52 கிலோமீட்டர் ஆக உள்ளது. டெல்லியில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை வரம்பு ரூ .107,490 முதல் ரூ.112,340 வரை உள்ளது. (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)
![பஜாஜ் பல்சர் 150 (இரட்டை டிஸ்க் வகை) Bajaj Pulsar 150 (Twin Disc Variant)](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/04/14/188100-bike2.jpg?im=FitAndFill=(500,286))
இந்த பட்ஜெட்டில், பஜாஜின் பைக் Bajaj Pulsar 150, ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது 149.5 cc 4-ஸ்ட்ரோக், 1-சிலிண்டர், BS6, 2-வால்வ், ட்வின்-ஸ்பார்க் எஃப்ஐ இன்ஜினைக் கொண்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 53 கிலோமீட்டர் ஆகும். இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ .10,188 -ல் தொடங்குகிறது. (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)
![டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 TVS Apache RTR 160](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/04/14/188099-bike3.jpg?im=FitAndFill=(500,286))
ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், இது உங்களுக்காக ஒரு சிறந்த பைக்காக இருக்கக்கூடும். அதன் இஞ்சின், அம்சங்கள் மற்றும் செயல்திறன் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இது 159.7 சிசி 1-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், எஸ்ஐ இன்ஜினைக் கொண்டுள்ளது. மைலேஜ் லிட்டருக்கு 54 கிலோமீட்டருக்கு அருகில் உள்ளது. இதன் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ .1,03,365 முதல் ரூ .1,06,365 வரை உள்ளது. ஃப்யூயல் டேங்கின் கொள்ளளவு 12 லிட்டர் ஆகும். (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)
யமஹாவின் இந்த பைக் மிகவும் ஸ்டைலானது. இது 149 சிசி, 2-வால்வ், 4-ஸ்ட்ரோக், எஸ்ஓஹெச்சி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 12.4 பிஎஸ் சக்தியையும் 13.6 என்எம் பீக் டார்க்கையும் தருகிறது. அதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ .1,04,700 ஆகும். (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)
பஜாஜின் இந்த பைக் இளைஞர்களின் பெரிய தேர்வாக இருந்து வருகிறது. நீங்கள் ஸ்டைலில் நாட்டம் உள்ளவராக இருந்தால், இந்த பைக் உங்களுக்கானதுதான். இது 160 சிசி 1-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 2-வால்வுகள், டி.டி.எஸ்-ஐ, எஸ்.ஓ.எச்.சி, ஏர்-கூல்ட் எஞ்சினைக் கொண்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ .1,04,339 ஆகும். (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)