Cars Under 5 Lakh | இந்தியாவில் 5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கார்களின் விவரங்கள்!
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், இந்திய கார் சந்தையில் இன்னும் சில மலிவுவில் உங்களுக்கான கார்கள் உள்ளன. இந்த தீபாவளிக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான (எக்ஸ்-ஷோரூம்) விலையுள்ள காரை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒன்றல்ல, இரண்டல்ல 5 சிறந்த கார்களை குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
மாருதியின் ஆல்டோ காரின் புதிய வடிவமான மாருதி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இந்த காரை 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க முடியும். மாருதி நிறுவனம் ரூ.3.99 லட்சம் என ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த காரை விற்பனை செய்கிறது. இந்த காரின் எஞ்சின் 998 சிசி மற்றும் பவர் 55.92 - 65.71 பிஹச்பி ஆற்றலை கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடலில் கிடைக்கும்.
இந்திய சந்தையில் மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.26 லட்சமாக உள்ளது. இது 998 சிசி 3-சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இது 55.92 - 65.71 பிஹச்பி ஆற்றலையும் 82.1 என்எம் - 89 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாலில் கிடைக்கும்.
ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விபனை ஆகும் கார்களில் ரெனால்ட் க்விட்-ம் ஒன்று. ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யும் ரெனால்ட் க்விட் இன் காரின் முக்கிய அம்சமாக பார்த்தால், இது 999 சிசி 3-சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இது 67.06 பிஹச்பி ஆற்றலையும், 91என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரை ரூ.4.69 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்
மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) கார் 8 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக உள்ளது. மாருதி செலிரியோவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.37 லட்சமாகும். ஆனால் ரூ.4.99 லட்சம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 998 சிசி 3-சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாலில் கிடைக்கும்.
நாட்டிலேயே மலிவான மின்சார கார் என்பதால், பட்ஜெட் விலையில் வாங்கலாம். மேலும் வடிவமைப்பு மிகவும் நவீனமானது மற்றும் கவர்ச்சிகரமானது. MG மோட்டார்ஸ் நிறுவனம் MG Comet EV காரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெறும் ரூ.4.99 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது. ஆனால் இதில் பேட்டரி பேக்கின் விலை சேர்க்கப்படவில்லை. இது 17.3 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ வரை செல்லும்.