கார் வாங்க திட்டமா... இதை கொஞ்சம் பாருங்க - ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி!
நீங்கள் தற்சமயம் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது எனலாம். பிரான்ஸ் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த SUV வகை காரான சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் (Citroen C5 Aircross) மீது ரூ.2 லட்சம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இது குறித்த தகவலை அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சலுகை வரும் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். நீங்களும் இந்த காரை வாங்க திட்டமிட்டால், இதன்மூலம் நீங்கள் ரூ.2 லட்சம் வரை சேமித்துக்கொள்ளலாம்.
இந்தச் சலுகை 2022ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த காரின் ஆரம்ப ஷோரூமிற்கு பிந்தைய விலை ரூ. 37.17 லட்சம் ரூபாயாகும். ஜூலை 31க்கு முன் இந்த காரை வாங்கினால், ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த தள்ளுபடியை பெற, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலர்ஷிப் அல்லது ஷோரூமில் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
காரில் கிடைக்கும் பவர்டிரெய்ன் பற்றி பேசுகையில், இந்த காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 174 bhp பவரையும், 400 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன் சமீபத்தில் இந்தியாவில் தனது காரை விற்பனை செய்யத் தொடங்கியது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் 4 கார்கள் உள்ளன.
இதில் ஆல் நியூ சி3 ஏர்கிராஸ், இ-சி3 ஆல் எலக்ட்ரிக், நியூ சி3 மற்றும் சி5 ஏர்கிராஸ் ஆகியவை அடங்கும். இந்த கார் ஹூண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.