சுட்டெரிக்கும் வெயிலிலும்... உடல் கூலாக இருக்க உதவும் பானங்கள்!
கோடை காலத்தில் பொதுவாகவே, உடலில் ஏற்படும் எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பு காரணமாக, சோர்வு மிகவும் அதிகமாக இருக்கும். கூடவே கடும் வெப்பம் காரணமாக, வயிற்றுப்போக்கு வாந்தி, செரிமான பிரச்சனைகள் ஆகியவை அதிகரிக்கும். மேலும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உண்டு.
நீர் மோரை போல கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு அற்புதமான பானம் எதுவும் கிடையாது. உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி ஆற்றலை அள்ளி வழங்கும் நீர்மோர், ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்து விடுபட துவங்குகிறது.
வெள்ளரி, புதினா இரண்டுமே உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டவை. இவை கோடை காலத்தில் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதனை அருந்துவதால், செரிமான பிரச்சனைகளும் வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.
எலுமிச்சை ஜூஸில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இதனால், கடுமையான கோடை காலத்தில் வியர்வை மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகளை ஈடுகட்ட எலுமிச்சை உதவுகிறது.
மாங்காயிலிருந்து தயாரிக்கப்படும் ஆம் பன்னா என்னும் பானம், உடலில் உள்ள எலக்ட்ரோ லைட்டுகளை சமன்படுத்தி, வெப்ப பக்கவாதம் என்னும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது.
தர்பூசணி கடும் கோடைக்கு ஏற்ற மிகச் சிறந்த பழம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும் இந்த பழ ஜூஸை சாப்பிடுவதால் உடலும் குளிர்ச்சியாக இருக்கும். கோடை கால பிரச்சனைகளை இதனால் தவிர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.