ரத்தன் டாடா வாழ்க்கையில் சிறந்தது இதுவும் ஒன்று !
ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாய்டு இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வயதற்ற நட்பு சில மனிதர்களுக்கு உதரணமாக அமையும்.
அன்பும்,காதலும் ஒரு இடத்தில் தோன்றும்போது அது நல்ல பண்பை மட்டும் பார்க்கிறது.வயதைப் பார்த்து எந்தவொரு நட்பும் தோன்றவில்லை.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற குறள் அனைவருக்கும் பொருந்துமா என்றுக் கேட்டால் இல்லை.இந்த குறள் சில உயிர்களிடம் மட்டுமே பொருந்தும்.
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல்,பழகப்பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும். அதுப்போல் வயதற்ற நட்பு - திருவள்ளுவர்
வாழ்க்கையில் பெரியவர்களிடம் பழகி பாருங்கள் அவர்களை விட நம்பிக்கைக்குரிய நண்பர் வேறுயாரும் இருக்க முடியாது.
துக்கத்திலும்,சந்தோஷத்திலும் தோள்கொடுப்பான் தோழன் என்பதை நாம் அறிந்திருப்போம். அதுப்போல் அனைவரின் நட்பு இருக்காது.ஆனால் வயதற்ற நண்பர்களிடம் இதுப் பொருந்தும்.
நல்ல நண்பரை நாம் இழக்கக்கூடாது என்றால் முதலில் நட்பாக பழகுவது பெற்றோர்களிடம்தான்.அதுவேத் தொடக்கம் அதுவே முடிவு. வயதான பெற்றோர்களும் நமக்கு நல்ல நண்பர்கள்தான்.
ரத்தன் டாடாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தில் இதுவும் ஒன்று.ஏனென்றால் சில மனிதர்கள் வயதின் அடிப்படையில் நட்பாக பழகி வருகின்றனர்.வயதற்ற நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரத்தன் டாடாவின் வயதற்ற நட்பு.