கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்கும் அசத்தல் உணவுகள்: கொழுப்புக்கு குட் பை
கொலஸ்ட்ரால் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். இது இரத்தத்தின் நரம்புகள் மற்றும் செல்களில் காணப்படுகிறது. நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். எனினும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு, பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் பல பக்கவிளைவுகள் எற்படுகின்றன. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி கூறியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி இது எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
பிளாக் பீன்ஸ், காராமணி, ராஜ்மா, பச்சை பயறு போன்ற பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பிளாக் டீ மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இவற்றில் உள்ள பண்புகள் உடல் எடையை குறைக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன.
கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு மிகவும் உதவியாக இருக்கும். பூண்டில் மூலிகைச் சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக பூண்டு கெட்ட கொழுப்பைக் குறைப்பதோடு, இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வாயுத் தொல்லைகளிலும் நிவாரணம் அளிக்கின்றது
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.