சுகர் லெவலை சட்டென குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள் இவைதான்
நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை அதன் பிறகு குணப்படுத்த முடியாது. எனினும் சரியான பழக்கவழக்கங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
முழு தானியங்கள்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை அரிசி, மைதா, ஆகியவற்றுக்கு பதிலாக, முழு கோதுமை, ஓட்ஸ், கினோவா, பழுப்பு அரிசி ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வேப்பம்பூ:சர்க்கரை நோயாளிகள் வேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக நன்மை பயக்கும். வேம்பு இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு உடலில் உள்ள கழிவுகளையும், விஷப்பொருட்களையும் நீக்க உதவுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இலவங்கப்பட்டை: இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும். இதில் இருக்கும் பண்புகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
பாகற்காய்: பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த காயாக பார்க்கப்படுகின்றது. இது சுகர் லெவலை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிப்பதால், நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் அதிக அளவில் குரோமியம் உள்ளது. இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கனிமம். நெல்லிக்காய் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு உடலின் ஆற்றலையும் அதிகரிக்கின்றது.
ஆளிவிதை: ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் , நார்ச்சத்து, லிக்னான்கள் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
நாவல் பழம்: நாவல் பழம் ஜாம்போலின் என்ற கலவையைக் கொண்டுள்ளது. இந்த கலவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தை தினமும் உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.