யூரிக் அமில பிரச்சனையா... மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை
சிறுநீரகங்கள் உடலில் உள்ள பியூரின்களை உடைக்கும் போது யூரிக் அமிலம் என்னும் கழிவு உருவாகிறது. யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீர் வழியாக வெளியேறி விடும் என்றாலும், யூரிக் அமில அளவு மிகவும் அதிகமாக இருக்கும் போது, அவை முழுமையாக வெளியேறாமல், மூட்டுகளில் படிவங்களாக கொண்டு வலியை உண்டாக்குகின்றன.
முருங்கைக்கீரை: முருங்கை கீரையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. செல்களை சேதப்படுத்தி வீக்கத்தை கொடுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. ஆகையால் முருங்கைக்கீரையை அடிக்கடி சேர்த்துக் கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.
வாதுமை பருப்பு: உலர் பழங்களில் சிறந்ததாக இருக்கும் வாதுமை பருப்பில் ஏராளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், இதை சாப்பிடுவதால் குளிர்காலத்தில் உடலை சூடாகவும் வைத்திருக்கும்.
கொத்தமல்லி: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கொத்தமல்லி யூரிக் அமில படிகங்களை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. உடலை டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட கொத்தமல்லி இலைகளை நீங்கள் தாயரிக்கும் தேங்காய் சட்னியில் சேர்த்து அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கிவி, எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு மற்றும் தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது யூரிக் அமில பிரச்சனையை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
கிரீன் டீ: ஆண்டி ஆக்ஸீடண்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ள க்ரீன் டீ குடிப்பதால் யூரிக் அமிலம் குறையும் என்பதோடு வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கும். எனவே, இது செரிமான ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைக்கிறது.
ஆளி விதை: யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளி விதை மிகவும் நன்மை பயக்கும். யூரிக் அமிலத்தை அகற்ற உதவும் ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதய ஆரோக்கியத்தை சிறப்பபாக வைத்துக் கொள்ளவும் ஆளி விதை உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.