கொய்யா ஜூஸ்... கொட்டிகிடக்கும் நன்மைகள் - கூடவே பெண்களுக்கும் ரொம்ப நல்லதாம்!
கொய்யா பழங்களை ஜூஸாக போட்டு குடிப்பது ஒரு புறம் இருந்தாலும், கொய்யா சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்ததாகும். இதில் குறைவான கலோரிகள், அதிக ஃபைபர் இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்வதும் நன்மையளிக்கும்.
கொய்யா பழம் மட்டுமின்றி அதன் இலையும் கூட மருத்துவ குணம் நிறந்தது. எனவே, கொய்யா பழத்தை உதாசினப்படுத்தாமல் அதனை சாப்பிட்டு உடல்நலனை பேணவும். தற்போது அதனை ஜூஸ் போட்டுக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.
சருமம் ஜொலி ஜொலிக்கும்: அனைத்து பழங்களை போலவே கொய்யாவிலும் வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடண்ட்கள் இருப்பதால், உங்களின் சருமத்தை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இதனால், வயதாகும் தோற்றம் தள்ளிப்போகும், தோலில் சுருக்கங்கள் தென்படாது.
உடல் எடை குறையும்: ஒரு முழு கொய்யா பழத்திலும் 37 கலோரிதான் உள்ளது. மேலும், ஃபைபரும் தேவையான அளவில் இருப்பதால் பசிக்கும்போது ஸ்நாக்ஸாகவும் கொய்யா பழத்தை சாப்பிடவும்.
செரிமானம் சீராகும்: கொய்யா பழ ஜூஸை ஃபைபர் அதிகம் இருப்பதால் உங்களின் செரிமானமும் சீராக இருக்கும்.
பெண்களின் கவனத்திற்கு: கொய்யா ஜூஸை குடிப்பதன் மூலம், மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி கட்டுப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, கொய்யா பழ ஜூஸை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்த இந்த செய்திகளை வாசித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு உபயோகமான தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே பதிவேற்றப்பட்டது. குறிப்பாக, வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் நிச்சயம் நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.