சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பழங்கள் உதவும்: உடல் பருமனுக்கு குட்பை
எடை இழப்பில் நமக்கு உதவும் சில ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் மிக முக்கியமானவை. எடை இழப்பில் நமக்கு உதவும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள்: பழங்களில், ஆப்பிள் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆப்பிளை காலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உண்ர்வுடன் இருக்கும். இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை இது பலப்படுத்துகிறது.
வாழைப்பழம்: வாழைப்பழம் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று பலர் கருதுவதுண்டு. ஆனால், வாழைப்பழத்தை சரியான முறையில் குறைந்த அளவில் உட்கொண்டால், அது எடை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இது அடிக்கடி ஏற்படும் பசியைத் தடுக்கிறது.
ஆரஞ்சு: வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரஞ்சு சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதனால் ஆரோகியமற்ற தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
பப்பாளி: பப்பாளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நன்மை பயக்கும் என்சைம்கள் உள்ளன. இவை எடை குறைக்க உதவுகின்றன. பப்பாளிப் பழம் வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண பிரச்சனையை நீக்குவதுடன், தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
தர்பூசணி: தர்பூசணி கோடையில் ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவைக் கொண்டிருக்கிறது. தர்பூசணி ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இது உடலுக்கு ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் சியை வழங்குகிறது. ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் இருக்கின்றன.
மாதுளை: மாதுளையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மேலும் இதில் கலோரிகள் அளவு முக குறைவு. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது. மதிய உணவில் மாதுளை சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.