வெப்-சீரிஸ் பைத்தியமா நீங்கள்... இடைஞ்சலே இல்லாமல் பார்க்க இந்த ரீசார்ஜ் பிளான்கள் உதவும்!

Wed, 22 May 2024-5:39 pm,

நீங்கள் ஓடிடிகளில் வரும் படங்கள், வெப்-சீரிஸ்களை ஒன்றுவிடாமல் பார்ப்பவர் என்றால் Jio AirFiber-இன் இணைப்பை பெறுவதன் மூலம் நீங்கள் பல ஓடிடிகளின் அணுகலையும் பெறுவீர்கள்.

 

அந்த வகையில், ஓடிடியில் இருக்கும் படங்களை, வெப்-சீரிஸ்களையும் இடைஞ்சலே இல்லாமல் பார்க்க உதவும் Jio AirFiber-இன் சிறந்த ரீசார்ஜ் பிளான்களை இங்கு காணலாம். 

 

Jio AirFiber 3,999 ரூபாய் பிளான் : இதில் 1Gbps இணைய வேகம் உங்களுக்கு கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும். 

 

Jio AirFiber 2,499 ரூபாய் பிளான் :  இதில் 500Mbps இணைய வேகம் கிடைக்கும். இதில் அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும். 

 

 

Jio AirFiber 1,499 ரூபாய் பிளான் : இதில் 300Mbps இணைய வேகம் கிடைக்கும்.  அத்துடன் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் கிடைக்கும். 

Jio AirFiber 1,199 ரூபாய் பிளான்: இதில் 1000ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் கிடைக்கும். அதேபோல், அமேசான் பிரைம் வீடியோ உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் கிடைக்கும். 

 

Jio AirFiber 899 ரூபாய் பிளான்:  இதில் 1000ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் கிடைக்கும். இதில் 14க்கும் மேற்பட்ட ஓடிடிகளின் அணுகல் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ இதில் இருக்காது. 

 

Jio AirFiber 599 ரூபாய் பிளான்:  இதில் 1000ஜிபி டேட்டா, 30Mbps வேகத்தில் கிடைக்கும். இதில் 14க்கும் மேற்பட்ட ஓடிடிகளின் அணுகல் கிடைக்கும். இதிலும் அமேசான் பிரைம் வீடியோ இதில் இருக்காது. 

 

கிடைக்கும் ஓடிடிகள்: Sony Liv, Disney+ Hotstar, Amazon Prime Lite, Lionsgate Play, Zee5, Discovery+, Hoichoi, Sun NXT, ShemarooMe, DocuBay, ALTBalaji, Eros Now, EPIC On, Netflix, Jio Cinema Premium, ETV Win, FanCode உள்ளிட்ட ஓடிடிகள் இந்த பிளான்களில் கிடைக்கின்றன. 

 

இதில் 899 ரூபாய் மற்றும் 599 ரூபாய்க்கு கிடைக்கும் இரண்டு பிளான்களுக்கு மட்டும் Amazon Prime Lite, Netflix, FanCode ஆகிய ஓடிடி சேவைகள் கிடைக்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link