பாடாய் படுத்தும் உடல் பருமனை பக்குவமாய் குறைக்கும் சமையலறை மசாலாக்கள்: ஒல்லி பெல்லி கேரண்டி

Sat, 07 Sep 2024-12:14 pm,

பல இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். நமது சமையலறையில் இருக்கும் மசாலாக்கள் இதில் நமக்கு பெரிய அளவில் உதவுகின்றன. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடை குறைக்க உதவும் மசாலாக்கள் மற்றும் அவற்றின் பிற நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கெட்ட கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றது. இந்த காரணத்தினால் எடை இழப்பில் மஞ்சள் மிகவும் உதவியாக இருக்கின்றது.

இலவங்கப்பட்டை சமையலறையில் இருக்கும் மசாலாக்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள மசாலாவாக உள்ளது. இது கலோரிகளை வேகமாக எரிக்க பயன்படுகின்றது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கின்றது.

மிளகு செரிமானத்தை சீராக்கி உடல் உப்பசம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் ஆகியவற்றை தவிர்க்க உதவுகின்றது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் மிளகு, தொப்பை கொழுப்பை கரைக்கவும் உடல் எடை குறைக்கவும் உதவியாக இருக்கின்றது.

இனிப்பு வகைகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் ஏலக்காய் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.

 

உணவிற்கு காரத்தன்மையை அளிக்கும் மிளகாயில் கேப்சைன் என்ற கலவை உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு கூடுதல் கொழுப்பை எரிக்கவும், கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றது

இஞ்சி: இஞ்சியில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அஜீரண கோளாறு சரிசெய்ய இஞ்சி பெரிய அளவில் உதவுகின்றது. வாயுத்தொல்லை, உடல் உப்பசம் ஆகியவற்றை போக்கவும், தொப்பை கொழுப்பைக் (Belly Fat) குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் இஞ்சி பயனுள்ளதாக இருக்கின்றது.

 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: பெரும்பாலான மசாலாப் பொருட்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் கலவைகள் உள்ளன. இவை கலோரிகளை எரிக்க உதவுகின்றன. மேலும் இந்த மசாலா பொருட்களில் உள்ள பண்புகள் செரிமானத்தை சீராக்கி வேகமாக உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கின்றன. 

நமது மசாலாப் பொருட்களில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

இலவங்கப்பட்டை, வெந்தயம் போன்ற சில மசாலாப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதோடு நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்க முடியும். 

இந்த சமையலறை மசாலாக்களுடன் சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் எடை இழப்புக்கு மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link