உங்கள் சமையலறையில்.... சுகர் லெவலை அசால்டாய் குறைக்கும் அற்புத தீர்வு
ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்நாட்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாம் உட்கொள்ளும் மாத்திரை மருந்துகள் சில சமயம் பல பக்கவிளைவுகள் ஏற்படுத்துகின்றன. இவற்றால் இன்னும் பல நோய்களும் ஏற்படுகின்றன.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர். தீக்ஷா பவ்சர் சவலியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீரிழிவு நோய்க்கான சில மூலிகைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் அந்த மசாலாக்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆளி விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகின்றன. இதன் மூலம் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளும் குறைகின்றன.
கருப்பு மிளகு இன்சுலின் உணர்திறனைக் குறைத்து, உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இதில் இருக்கும் 'பைப்பரின்' பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவும் ஒரு மசாலாவாக உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, உணவு உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதுமட்டுமின்றி கொழுப்பைக் கரைத்து கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
வெந்தயம் அதன் கசப்பான சுவை மற்றும் சூடான தன்மை காரணமாக, நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு சிறந்த ஆயுர்வேத மூலிகையாக கருதப்படுகிறது. இது ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரையை குறைக்கிறது. வெந்தயம் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.