சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்க
மனித குலத்தை ஆட்கொள்ளும் கொடுமையான நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும். கடந்த சில தசாப்தங்களில் இது மிக வேகமாக அதிகரித்துள்ளது. பொதுவாக தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் இதற்கு காரணமாக இருக்கின்றன. இது மரபணு காரணங்களாலும் ஏற்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உலக அளவில் கடந்த சில ஆண்டுகளில் சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்தியா நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், அவர்களின் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதை முழுதாக குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை. எனினும், சரியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் இதை கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டுவரலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாவிட்டால், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள GIMS மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் ZEE NEWS இடம், உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 3 சிறப்பு தாவரங்களை பற்றி கூறியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயத்தில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஆயுர்வேதத்தில் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது. வெந்தயம் சுகர் நோயாளிகளுக்கு மிக உதவியாக இருக்கும். வெந்தயக் கீரை, வெந்தய விதைகள், வெந்தய பொடி என அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதை எளிதாக வீட்டில் ஒரு சிறு தொட்டியில் வளர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
கற்றாழை மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இது நமது கூந்தல் மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதுமட்டுமின்றி இதன் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுக்குள் வைக்கலாம் என்பது பலருக்கு தெரியாது. கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை பிரித்தெடுத்து அதன் சாறு தயார் செய்து குடித்தால், நீரிழிவு நோயாளிகளில் அதன் பலன் சில நாட்களில் தெரிய ஆரம்பிக்கும்.
இன்சுலின் செடியின் அறிவியல் பெயர் Costus igneus. இதன் இலைகளில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. வீட்டு முற்றத்திலும் இந்த செடியை வளர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.