கடன் வாங்கறதுன்னு முடிவு செய்துட்டா பர்சனல் லோன் தான் பெஸ்ட்! ஏன் எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
தனிநபர் கடன் பெறுவதற்கு ஒப்புதலுக்காக அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை. இதை எளிதாகப் பெறலாம். பாதுகாப்பற்ற கடன் என்ற பிரிவில் வரும் இந்தக் கடனை பெறுவதற்கு எந்த விதமான பத்திரத்தையும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.
CIBIL மதிப்பெண் நன்றாக இருந்தால், கடனை எளிதில் திருப்பிச் செலுத்த உங்கள் வருமானம் போதுமானதாக இருந்தால், உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடனை நீங்கள் தேர்வு செய்யலாம்
திருமணம், மருத்துவ அவசரநிலை அல்லது வேறு எந்த வகையான அவசர நிலையிலும், பணம் தேவைப்படும்போது, தனிநபர் கடன் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்
தனிநபர் கடன் என்பது பிணையில்லாத கடன் என்பது முதல் நன்மை. பதிலுக்கு நீங்கள் எதையும் அடகு வைக்க தேவையில்லை.
தனிநபர் கடனில், கடன் வாங்கும் பணத்தை செலவழிக்க எந்தவித கட்டுப்பாடுகள் இல்லை. உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப இந்த தொகையை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்துவது சுலபமானது, வழக்கமாக 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை இருக்கும். உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
அனைத்துவிதமான கடன்களிலும் அதிக சிரமமில்லாமல் உடனடியாக வாங்கக்கூடியது இந்தக் கடன் தான்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை